கடந்த வாரம் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது ஆகஸ்ட் 1 முதல் வங்கிக் கணக்குத் தொடங்கும் புதிய வாடிக்கையாளர்கள், தங்களது வங்கிக் கணக்கில் மாதாந்திர குறைந்தபட்ச இருப்பு சராசரி என்பதை ரூ.50,000 ஆக வைத்திருக்க வேண்டும் என்ற புதிய அறிவிப்பை ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் வெளியிட்டது.
ஐசிஐசிஐ வங்கியின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றது. இந்நிலையில் தற்போது ஹெச்டிஎப்சி வாங்கியும் தங்களுடைய சேமிப்பு கணக்குகளுக்கான மினிமம் பேலன்ஸ் அளவை உயர்த்தி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
மினிமம் பேலன்ஸ் 25 ஆயிரம் ரூபாய் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறது . இதற்கு முன்பு வரை இந்த தொகை 10,000 ரூபாயாக இருந்தது. மினிமம் பேலன்ஸ் பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்கியவர்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். ஏற்கனவே ஹெச்டிஎப்சி வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பழைய நிலையே தொடரும் என்றும் ஹெச்டிஎப்சி தெரிவித்துள்ளது.