லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் அமீர்கான், நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ் என முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், இப்படம் வெளியாகியுள்ள அனைத்து மாநிலங்களிலும் தியேட்டர்கள் ஹவுஸ்புல் ஆக உள்ளன. நாளை முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை உள்ளதால் கொண்டாட்டத்திற்கு பஞ்சமே இருக்காது. முன்னணி தியேட்டர்களில் அனைத்து காட்சிகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது வெளியாகியுள்ள ஷாக் தகவல் என்னவென்றால் ‘கூலி ‘ படம் வெளியான சில மணிநேரங்களிலேயே இணையதளங்களில் கசிந்துள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.