சென்னையில் முக்கியப் போக்குவரத்தாக உள்ள புறநகர் ரயில் சேவையையே பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் – கூடூர் இடையே பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளதால் சென்னையில் இன்றும், ஆகஸ்ட் 16, 18 ஆகிய தேதிகளில் 17 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்டுள்ள 17 புறநகர் ரயில்களுக்கு பதிலாக சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.