சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என நாளைமுதல் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு கல்வி நிறுவனங்களுக்கும் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தனியார் பேருந்துகள் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் கட்டணம் ரூ. 4,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரூ. 2,000 -க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதே போல விமான கட்டணங்களும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி, கோவை செல்லும் விமானங்களின் கட்டணம் ரூ. 23,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.