ஏஐ நிறுவனங்கள் உலகளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏஐ யூசர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் ஏஐ டூல்கள் அளிக்கும் பதில்கள் சர்ச்சையாகி வருகிறது. அப்படித் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை “மிகவும் இழிவான குற்றவாளி” என்று எலான் மஸ்க்கின் க்ரோக் (Grok) AI கூறியது பேசுபொருள் ஆகியுள்ளது.
நெட்டிசன் ஒருவர் க்ரோக்கிடம் வாஷிங்டனில் குற்றங்கள் குரைந்து வருகிறதா.. தலைநகர் வாஷிங்டனின் மிகவும் இழிவான குற்றவாளி யார் எனக் கேட்டுள்ளார். அதற்குத் தான் டிரம்ப்பை இழிவான குற்றவாளி என க்ரோக் சொல்லியுள்ளது. நியூயார்க்கில் டிரம்ப் மீது பதிவு செய்யப்பட்ட 34 மோசடி வழக்குகளைச் சுட்டிக்காட்டி அவரை நகரத்தின் மிக இழிவான குற்றவாளி என்று க்ரோக் மீண்டும் மீண்டும் கூறியிருக்கிறது.
கடந்த சில காலமாகவே எலான் மஸ்க், டிரம்ப் இடையே மோதல் நிலவி வந்த நிலையில், அவரது க்ரோக் நிறுவனம் டிரம்ப்பை விமர்சித்து கருத்து கூறியிருக்கிறது. க்ரோக்கின் இதுபோன்ற பதில்கள் தொடர்ந்து சர்ச்சையைக் கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது.