Tuesday, August 12, 2025
HTML tutorial

சக நடிகருக்கு கல்லீரல் பாதிப்பு : ஓடி வந்து உதவிய நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் அபிநய். இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்தார். கடைசியாக சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு நடிகர் அபிநய், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வேகமாக பரவியது. இவருக்கு KPY நடிகர் பாலா ரூ. 1 லட்சம் பணம் கொடுத்திருந்தார். அந்த வீடியோ வெளிவந்து வைரலானது.இந்நிலையில், நடிகர் தனுஷ் தற்போது ரூ. 5 லட்சம் கொடுத்து மருத்துவ செலவுக்கு உதவியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News