லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தமிழகத்தில் டிக்கெட் முன்பதிவு அதிவேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டிக்கெட் முன்பதிவில் வட அமெரிக்காவில் 2 மில்லியன் டாலர்கள் அதாவது ரூ. 17 கோடியே 52 லட்சத்து 88 ஆயிரத்து 525 வசூல் செய்திருக்கிறது. வட அமெரிக்காவில் இது வரை எந்த தமிழ் படத்திற்கும் டிக்கெட் முன்பதிவில் 2 மில்லியன் டாலர்கள் வந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.