மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு சரக்கு விமானம் தரையிறங்கும் போது 4வது இன்ஜினில் தீ விபத்து புகை வெளியேறியது. இதனையடுத்து விமானி அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
விமானம் தரையிறங்கியதும் உடனடியாக விமானத்தில் பற்றிய தீ அணைக்கப்பட்டது. உரிய நேரத்தில் விமானத்தில் பற்றிய தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.