Monday, August 11, 2025
HTML tutorial

திருடுபோன 5 லட்சம் செல்போன்கள் : கண்டுபிடிக்க உதவிய செயலி

மத்​திய தொலைத்​தொடர்​புத் துறை கடந்த ஜனவரி 17-ம் தேதி ‘சஞ்​சார் சாத்தி’ என்ற செயலியை அறிமுகம் செய்தது. இந்த செயலியில் 21 மொழிகள் உள்ளது. அத்​துடன் தொலைந்​து​போன அல்​லது திருடு​போன செல்​போன்​களை கண்​காணித்து மீட்க அல்​லது முடக்​க​வும் உதவு​கிறது.

இந்த செயலி அறி​முகம் செய்​யப்​பட்​டது முதல் இது​வரை காணா​மல் போன 1 கோடிக்​கும் மேற்​பட்ட செல்​போன் இணைப்​பு​களை துண்​டித்​துள்​ளது. திருடு போன 5.35 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட செல்​போன்​களை மீட்க இந்த செயலி உதவி உள்​ளது. இந்த செயலியை இது​வரை 50 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பதி​விறக்​கம் செய்​துள்​ளனர். சஞ்​சார் சாத்தி இணை​யதளத்தை இது​வரை 16.7 கோடி பேர்​ பார்த்​துள்​ளனர்​.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News