சென்னை நகரின் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையிலும், சென்னையின் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையிலும் சென்னை பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து 135 புதிய மின்சாரப் பேருந்துகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த மின்சார பேருந்துகளில் GPS கண்காணிப்பு, LED டிஜிட்டல் அறிவிப்புப் பலகைகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்காக CCTV கேமராக்கள், இலவச வைஃபை, USB சார்ஜிங் போர்ட் ஆகிய வசதிகள் உள்ளன.
மின்சார பேருந்துகள் எந்தெந்த ரூட்டில் இயங்கும்?
கோயம்பேடு – கேளம்பாக்கம் / சிறுசேரி ஐடி பூங்கா இடையே 20 புதிய மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வழி: எம்.எம்.டி.ஏ காலனி, வடபழனி, அசோக் பில்லர், காசி தியேட்டர், ஈக்காடுதாங்கல், CIPET, கிண்டி பே.நி., கான்கோட் / வேளச்சேரி (Check Post), குருநானக் கல்லூரி, வேளச்சேரி, எஸ்.ஆர்.பி டூல்ஸ், தன்சாவடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர் ப.யூ. அலுவலகம், குமரன் நகர், செம்மஞ்சேரி, நாவலூர் [570: இந்துஸ்தான் கல்லூரி / 570S: சிப்காட்)
சென்னை விமான நிலையம் – சிறுசேரி ஐடி பூங்கா இடையே 15 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வழி: வழி: பல்லாவரம், பல்லாவரம் புதிய மேம்பாலம், வேல்ஸ் பல்கலைக்கழகம், ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், குமரன் நகர், செம்மஞ்சேரி ஆலமரம், நாவலூர், சிப்காட்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்-திருவான்மியூர் இடையே 5 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வழி: வண்டலூர் உயிரியல் பூங்கா, வண்டலூர் கேட், பெருங்களத்தூர், இரும்புலியூர், தாம்பரம் கிழக்கு, கான்வென்ட், பல்லவன் நகர், சோழிங்கநல்லூர் ப.யூ. அலுவலகம், காரப்பாக்கம், துரைப்பாக்கம், கந்தன்சாவடி, எஸ்.ஆர்.பி டூல்ஸ்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்-சோழிங்கநல்லூர் இடையே 5 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வழி: வண்டலூர் உயிரியல் பூங்கா, கொளப்பாக்கம், வெங்கம்பாக்கம், கண்டிகை, மாம்பாக்கம், புதுபாக்கம், சாமியார் பண்ணை, கேளம்பாக்கம் சாலை சந்திப்பு, இந்துஸ்தான் கல்லூரி, நாவலூர், செம்மஞ்சேரி, குமரன் நகர்.
தியாகராய நகர் – திருப்போரூர் இடையே 5 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வழி: சைதாப்பேட்டை, எஸ்.ஆர்.பி டூல்ஸ், கந்தன்சாவடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர் ப.யூ. அலுவலகம், குமரன் நகர், செம்மஞ்சேரி, நாவலூர், இந்துஸ்தான் கல்லூரி, கேளம்பாக்கம், கோமான் நகர் சாலை சந்திப்பு.
பிராட்வே – கேளம்பாக்கம் இடையே 5 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வழி: தலைமைச் செயலகம், சேப்பாக்கம், இராணி மேரி கல்லூரி, ஏ.எம்.எஸ் மருத்துவமனை, அடையார் ஓ.டி. இந்திரா நகர், எஸ்.ஆர்.பி டூல்ஸ், கந்தன்சாவடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர் ப.யூ. அலுவலகம், குமரன் நகர், செம்மஞ்சேரி, நாவலூர், இந்துஸ்தான் கல்லூரி.