சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால், அதனை தகர்ப்போம் என்று அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி சையத் ஆசிம் முனீர் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இரண்டாவது முறையாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி, அந்நாட்டின் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க வாழ் பாகிஸ்தானியர்களுடன் ஆசிம் முனீர் நேற்று கலந்துரையாடியுள்ளார். அப்போது, ”சிந்து நதியில் இந்தியா அணை கட்டும் வரை நாம் காத்திருப்போம், அணை கட்டியவுடன் அதனை தகர்ப்போம்” என ஆசிம் முனீர் பேசியதாக பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இந்தியா – பாகிஸ்தான் மோதலை தடுக்க உதவிய டிரம்ப்புக்கு நன்றி.” என்று அவர் தெரிவித்துள்ளார்.