ஐசிஐசிஐ வங்கி புதிய வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச சராசரி இருப்புத்தொகையை ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரத்திற்கு உயர்த்தியுள்ளது. இந்த புதிய விதி ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வந்துள்ளது.
ஐசிசிஐசி-யின் திருத்தப்பட்ட கட்டமைப்பின் கீழ், பெருநகர மற்றும் நகர்ப்புறங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச சராசரி இருப்பு ரூ.50,000 ஐ பராமரிக்க வேண்டும்.
நகர்ப்புற கிளை வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச சராசரி இருப்புத்தொகையை ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரத்திற்கு உயர்த்தியுள்ளது. கிராமப்புற கிளைகளுக்கு ரூ.2,500 இல் இருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இது பற்றாக்குறையில் 6% அல்லது ரூ.500, இந்த இரண்டில் எது குறைவாக இருக்கிறதோ அதுவாக நிர்ணயிக்கப்படும்.
சேமிப்புக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத்தொகையையும் ஐசிஐசிஐ வங்கி கணிசமாக உயர்த்தியது, அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.