தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் ஆயிரத்து 80க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
அரசு போக்குவரத்து கழங்களுக்கு 4 ஆயிரத்து 300 புதிய பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. முதல்கட்டமாக ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஏற்கெனவே பயன்பாட்டிற்கு வந்தன. இதற்கிடையே படுக்கை, இருக்கை வசதியுடன்கூடிய 110 புதிய சொகுசு பஸ்கள் வாங்க டெண்டர் இறுதி செய்யப்பட உள்ளது. இந்த பேருந்துகள் பொங்கல் பண்டிகைக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.