Saturday, August 9, 2025
HTML tutorial

தாம்பரத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம் அருகே 115.38 கோடி ரூபாயில் புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 2.27 லட்சம் சதுர அடி பரப்பளவில் 6 தளங்களுடன் புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

400 படுக்கைகள், 6 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் புதிய மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. குரோம்பேட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் 7 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பல் மருத்துவமனை ஒரு கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஆய்வகம், மற்றும் 3 நகர்ப்புற துணை சுகாதார நிலையங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News