தமிழ்நாட்டின் பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
இதில் மிக முக்கியமாக 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வரும் கல்வி ஆண்டு முதல் இந்த புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.