மத் டெய்ட்கே என்ற 24 வயதான இளம் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆராய்ச்சியாளர், புதுமையான திறமையால் உலகத்தை வியப்பில் ஆழ்த்தியவர். இவர் பிஎச்டி படிப்பை பாதியில் நிறுத்தி, ஏஐ துறையில் புதுமைசெய்து, மோல்மோ என்ற சாட்பாட் உருவாக்கியுள்ளார். இந்த சாட்பாட் எழுத்துகள், ஓசைகள் மற்றும் புகைப்படங்களை புரிந்து கொண்டு மனிதர்களுடன் இணைந்து வேலை செய்யக்கூடிய திறன் கொண்டது.
2024-ஆம் ஆண்டு, மெட்டா நிறுவனம் முதலில் 125 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,000 கோடி) ஊதியத்துடன் டெய்ட்கேவை வேலைக்கு அழைத்தது. ஆனால் தன் சுதந்திர ஆராய்ச்சிக்காக அவர் இந்த வாய்ப்பை மறுத்தார். பின்னர், மெட்டாவின் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், நேரில் சந்தித்து, 250 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,000 கோடி) ஊதியத்தில் 4 ஆண்டுகளுக்கு பணியமர்த்தினார்.
தற்போது, டெய்ட்கே மெட்டாவின் சூப்பர் இன்டெலிஜன்ஸ் ஆய்வகத்தில் பணியாற்றுகிறார்.இவரது திறமையும், பணியும் இன்னும் ஏஐ துறையில் முன்னோடியாக இருக்கின்றது.