பாமக நிறுவனர் ராமதாசின் தொலைபேசி வை-பை மூலம் சட்டவிரோதமாக ஹேக் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹேக் செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி கோட்டக்குப்பம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி வைத்துள்ளதாக கூறினார்.
இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தற்போது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது மேலும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.