ஆபரண தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து, நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. அதன்படி, இன்று கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து, 9 ஆயிரத்து 370 ரூபாய்க்கும், சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 74 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரன் தங்கத்தின் விலை 75 ஆயிரம் ரூபாயை நெருங்கியதால் நகை வாங்கும் ஆசையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 125 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.