Monday, August 4, 2025
HTML tutorial

செப்டம்பர் 30 க்குள் நிறுத்தப்படும் ரூ.500 நோட்டுகள்? மத்திய அரசு விளக்கம்

2016-ம் ஆண்டு மத்திய அரசு ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகளை வாபஸ் பெற்றது. கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.

தற்போது புதிதாக தகவல் ஒன்று பரவி வருகிறது. அதாவது, “ரிசர்வ் வங்கி, செப்டம்பர் 30, 2025-க்குள் ATM-களில் ரூ. 500 நோட்டுகளை வழங்குவதை நிறுத்தும்படி வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. 75% ரூ. 500 நோட்டுகளின் புழக்கத்தை அக்டோபர் 2025-க்குள் குறைக்க வேண்டும் என்றும், 90% புழக்கத்தை மார்ச் 2026-க்குள் குறைக்க வேண்டும் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி முற்றிலும் போலியானது என்பதை மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) உறுதி செய்துள்ளது. ஆகஸ்ட் 3, 2025 அன்று, PIB Fact Check தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ரூ. 500 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லும்” என்று ஒரு பதிவை வெளியிட்டு, இந்த வதந்தியைப் பொய்யானது என்று குறிப்பிட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News