பிரபல காமெடி நடிகர் மதன் பாப் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 71.
மதன் பாப்பின் உண்மையான பெயர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய சிரித்த முகபாவனைதான் இவருக்கான அடையாளம்.
இசைக்கலைஞனாக தனது பயணத்தை தொடங்கிய இவர் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடியனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
நடிப்பைத் தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இவர் பங்கேற்றிருக்கிறார்.
இந்நிலையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார்.