கடந்த 2019ம் ஆண்டில் புளோரிடா மாநிலத்தில் ஜார்ஜ் மெக்கீ என்பவர் தனது டெஸ்லா காரில் ஆட்டோபைலட் இயக்கத்தைக் கொண்டு செல்லும் போது, அவரது மொபைல் போன் கீழே விழுந்தது.
கார் ஆட்டோபைலட் இயக்கத்தில் இருந்ததால், ஜார்ஜ் தொலைபேசியை எடுப்பதற்காக குனிந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வேறு கார் மீது மோதியது. இதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகினர். இதனை விசாரித்த நீதிமன்றம் டெஸ்லா நிறுவனத்திற்கு 243 மில்லியன் டாலர்களை (சுமார் ₹2,000 கோடி) இழப்பீடு வழங்க வேண்டும் என்று புளோரிடா நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.