தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சிகளிலும், பேனர்களிலும் கட்சி தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த் புகைப்படங்களை அக்கட்சியினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் த.வெ.க. நிகழ்ச்சிகளில் தலைவர் விஜய் படத்தை தவிர வேறு யாருடைய படத்தையும் பயன்படுத்தக் கூடாது என த.வெ.க. வினருக்கு உத்தரவிட்டு உள்ளார். மீறி பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.