தேனி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இதில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் , திமுக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் , ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன்,பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது நலத்திட்ட உதவிகள் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கர்ப்பிணி பெண்கள், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க சென்றார்.
அப்போது ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், என்னுடைய தொகுதியில் நான் தான் நலத்திட்ட உதவிகள் வழங்குவேன் என நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டிருக்கும் போதே குறுக்கிட்டு பரித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ மகாராஜனை பார்த்து “போடா முட்டா பயலே”என்று கலெக்டர் முன்னிலையிலேயே பகிரங்கமாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ மகாராஜன் “யாரைப் பார்த்து டா முட்டாப் பயலே சொல்ற” ராஸ்கல் தொலைச்சிருவேண்டா”என்று தங்கதமிழ்செல்வனை பார்த்து சீறினார்.
அரசு நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் மக்கள் பிரதிநிதிகள் என்பதையும் மறந்து சண்டையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.