தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் முகமது, 58. இவர், தனது காரில் கும்பகோணத்தில் இருந்து கோவை சென்ற அவர் நேற்று மதியம், 1:00 மணிக்கு, திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
குளித்தலை ஜூம்மா மசூதியில், தொழுகைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக, கூகுள் மேப்பை பார்த்தபடி காரை ஓட்டினார். காவிரி படுகையில் உள்ள தென்கரை பாசன வாய்க்கால், நடைபாலம் வழியாக கார் சென்றது.
சிறிது தூரம் சென்றதும், கார் செல்லமுடியாமல் கவிழும் நிலையில் அந்தரத்தில் தொங்கியவாறு நின்றது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு கிரேன் வரவழைக்கப்பட்டு, கார் மீட்கப்பட்டது. கூகுள் மேப்பை பார்த்தபடி காரை ஓட்டி வந்தவர், நடைபாலத்தை சாலை என நினைத்து சென்றதால் விபத்தில் சிக்கியது தெரிய வந்தது.