ரயிலில் சென்ற இளைஞரிடம் செயினை பறித்து சென்ற சம்பவத்தில் 3 பேரை சேலம் ரயில்நிலைய போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரிலிருந்து சேலம் வழியே திருச்சி செல்லும் ரெயிலில் பயணம் செய்த வாலிபரிடம் இரண்டு சவரன் தங்க நகை பறித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. விஜயகுமாரின் கழுத்தில் இருந்த தங்கசெயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர். பயணிகள் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களில் ஒருவரை பிடித்து சேலம் ஜங்ஷன் ரயில் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் கனிஷ்,பரத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து தங்கசெயினும் பறிமுதல் செய்யப்பட்டது.