தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் உயர்ந்து, மீண்டும் 74 ஆயிரம் ரூபாயை தாண்டியது.
ஆபரண தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக குறைந்திருந்த நிலையில், இன்று ஒரேநாளில் சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து, 9 ஆயிரத்து 290 ரூபாய்க்கும், சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் உயர்ந்து,74 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஆடி பெருக்கை முன்னிட்டு, ஏராளமானோர் நகை வாங்க திட்டமிட்டிருந்த நிலையில், இன்று விலை உயர்ந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 123 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.