பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்குநிலை வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் ஆகஸ்ட் 8, 2025க்கு உட்பட தங்கள் கேஒய்சி (Know Your Customer) விவரங்களை அவசரமாக புதுப்பிக்க வேண்டும் என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கேஒய்சி அப்டேட் செய்ய பல வழிகளை கொடுத்துள்ளது. உங்களுக்கு எது வசதியோ, அதை பயன்படுத்தி அப்டேட் செய்யலாம்.
நீங்கள் ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் கேஒய்சி அப்டேட் செய்யவில்லை என்றால் பஞ்சாப் நேஷனல் வங்கி உங்களுடைய கணக்கை தற்காலிகமாக முடக்கிவிடும்.
இதனால் உங்களால் பணம் எடுக்கவோ, டெபாசிட் செய்யவோ முடியாது. ஆன்லைன் பரிவர்த்தனைகளும் நிறுத்தப்படும். பல்வேறு வங்கிச் சேவைகளைப் பயன்படுத்த முடியாது. எனவே இந்த அப்டேட்டை உடனடியாக செய்து முடிப்பது நல்லது.