மத்திய கிழக்கில் மோதலை தூண்டுவதாகவும், அமெரிக்காவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் ஈரான் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் வர்த்தகம் செய்யக்கூடாது என்று எச்சரித்தார்.
டிரம்பின் எச்சரிக்கையை மீறி ஈரானிடம் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருள்களை வாங்கிய 20 நிறுவனங்கள் அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய தடை விதித்தது.
குறிப்பாக, இந்தியாவின் காஞ்சன் பாலிமர்ஸ், அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ், ராம்னிக்லால் எஸ் கோசாலியா & கோ, ஜூபிடர் டை கெமிக்கல் பிரைவெட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்தத் தடை விதித்துள்ளது. இதே போல துருக்கி, இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.