Wednesday, July 30, 2025

நான் மட்டும் இல்லையென்றால் இந்தியா – பாகிஸ்தான் போர் நடந்துகொண்டிருக்கும் – டிரம்ப்

இந்தியா-பாகிஸ்தான் போரை தானே நிறுத்தியதாக டிரம்ப் ஏற்கனவே பலமுறை கருத்து தெரிவித்து வருகிறார். அதனை மத்திய அரசு மறுத்து வருகிறது.

இந்நிலையில் தான் தலையிடாவிட்டால், இரு நாடுகளும் இந்நேரம் போரில் ஈடுபட்டிருக்கும் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைவர்களை நான் நன்கு அறிவேன். போருக்குச் செல்ல விரும்பினால் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட மாட்டேன் என்பதை நான் கூறினேன்.

நான் இல்லையென்றால், ஆறு பெரிய போர்கள் நடந்திருக்கும். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்கள் எழுந்தபோது சரியான நேரத்தில் தான் தலையிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News