நேற்று தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,160-க்கும், ஒரு சவரன் ரூ.73,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.73 ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.9,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது
வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 126 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.