ஆத்தூர் அருகே பிஎஸ்என்எல் கேபிள் ஒயர்களை திருடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ரயிலடி தெரு வழியாக பிஎஸ்என்எல் கேபிள் வயர் செல்கிறது. கடந்த 19ஆம் தேதி இரவு கெங்கவள்ளியில் உள்ள பிஎஸ்என்எல் டவர் செயல்படவில்லை என தெரிகிறது. இதையடுத்து அதிகாரிகள்ஆய்வு செய்தபோது, ஆத்தூர் ரயிலடி தெருவில் இரண்டு லட்சம் மதிப்பிலான 30 மீட்டர் நீளமுள்ள காப்பர் கேபிள் வயர்கள் வெட்டி எடுக்கப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து பிஎஸ்என்எல் கோட்ட பொறியாளர் கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் தகவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கேபிள் வயர் திருடிய செல்லக்கண்ணு, கோவிந்தன்,
ரஞ்சித் குமார், வெங்கடேசன் ஆகிய பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 65 கிலோ எடையிலான 2 லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பிலான கேபிள் வயர்களை பறிமுதல் செய்தனர்.