தங்கம் மற்றும் வெள்ளி இன்று விலைமாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரண தங்கத்தின் விலை கடந்த வாரத்திற்கு ஏறு மற்றும் இறங்குமுகத்தில் இருந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைமாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி ஒரு கிராம் தங்கம் 9 ஆயிரத்து 160 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 73 ஆயிரத்து 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் 126 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.