செம்பரம்பாக்கம் ஏரியில் 3 நாட்கள் வரை பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சென்னை குடிநீர் வாரியம் சார்பில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை மண்டலங்கள் 7 முதல் 13 வரை மற்றும் தாம்பரம் மாநகராட்சியில் இருக்கக்கூடிய சில பகுதிகளில் குடிநீர் விநியோகமானது தடைபடும். பொதுமக்கள் தேவையான அளவு தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை புதிதாக 2000 மி.மீ விட்டமுடைய குடிநீர் குழாய் அமைக்கப்படுகிறது. இந்த குழாய் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் குழாயுடன் இணைக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜூலை 30 காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 1 இரவு 10 மணி வரை குடிநீர் விநியோகம் தடைபடும். மண்டலங்கள் 7 (அம்பத்தூர்), 8 (அண்ணா நகர்), 9 (தேனாம்பேட்டை), 10 (கோடம்பாக்கம்), 11 (வளசரவாக்கம்), 12 (ஆலந்தூர்), 13 (அடையாறு) ஆகிய பகுதிகளில் குடிநீர் கிடைக்காது. முக்கியமாக தாம்பரம் மாநகராட்சியில் இருக்கும் சில பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் இருக்காது.