இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது ” அஜித் சார் நடிப்பில் கண்டிப்பாக திரைப்படம் இயக்குவேன். இது 100 சதவீதம் உறுதி. அதற்கான பேச்சு வார்த்தைகள் இப்பொழுது தான் தொடங்கியுள்ளது என கூறியுள்ளார். இது அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.