தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 44 வயது Thaweesak Namwongsa என்பவர், விவாகரத்துக்குப் பிறகு உணவு எதுவும் சாப்பிடாமல் மாதம் முழுதும் பீர் மட்டுமே குடித்து வந்துள்ளார். இதில் அவரது உடல் நிலை மோசமானதால் உயிரிழந்தார்.
மனைவியை பிரிந்த சோகத்தில் இருந்த இவர் 100 பாட்டில் பீர்களை குடித்துள்ளார். மகன் இவருக்காக உணவு சமைத்து கொடுத்தாலும் சாப்பிட மறுத்துள்ளார். அளவுக்கு அதிகமாக மது அருந்தியதே இவரின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.