Sunday, July 27, 2025

நடுவானில் அருகருகே வந்த விமானங்கள், தூக்கி வீசப்பட்ட பயணிகள்

அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பர்பாங்க் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஒரு சவுத்வெஸ்ட் விமானம், திடீரென 500 அடி உயரத்துக்கு கீழே பல்டி அடித்தது. நடுவானில் அருகருகே வந்த விமானங்கள் மோதல் தவிர்க்க, பல்டி அடித்த விமானத்தில் பணியாளர்கள் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.

இந்த திடீர் பல்டியால், இருக்கையில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். விமானத்தில் இருந்த இரண்டு பணிப்பெண்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விமானியின் சாதுரியமான முயற்சியால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news