ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நடுவானில் பறந்தபோது, தாய்லாந்து பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தையை பெற்றெடுத்தார்.
மஸ்கட்டில் இருந்து மும்பைக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த தாய்லாந்து பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து விமானப் பணிப்பெண்கள், விமானத்தில் இருந்த செவிலியர் உதவியுடன் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க ஏற்பாடு செய்தனர். தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறக்கப்பட்டதும், அந்த பெண்ணும், குழந்தையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், அந்த பெண்ணும், குழந்தையும் தாய்லாந்து செல்வதற்கு மும்பையில் உள்ள தாய்லாந்து துணைத் தூதரகத்துடன் தொடர்பில் உள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.