பா.ம.க. தலைவரான டாக்டர் அன்புமணி ‘உரிமை மீட்பு பயணம்’ என்ற பெய ரில் சென்னையை அடுத்த திருப்போரூரில் இருந்து நேற்று மாலை நடைபயணத்தை தொடங்கினார்.
அன்புமணியின் நடை பயணத்தால் தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அன்புமணியின் நடைபயணத்துக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தடை விதித்திருப்பதாக நேற்று இரவு தகவல் வெளியானது. இதனை டி.ஜி.பி. அலுவலக அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக டி.ஜி.பி. அலுவலக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “அரசியல் கட்சியினர் நடத்தும் போராட்டங்கள், நடைபயணம் போன்ற சுற்றுப்பயணங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக எப்போதுமே டி.ஜி.பி. அலுவலகத்தில் முடிவு எடுக்கப்படுவதில்லை.
எந்தெந்த பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறதோ அங்குள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அலுவலகங்களில் தான் அது தொடர்பான முடிவு கள் எடுக்கப்படும்.
இது தொடர்பான சுற்றறிக்கையை சரியாக புரிந்து கொள்ளாமலேயே அன்புமணியின் நடைபயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவலை பரப்பிவிட்டார்கள். அதுபோன்று எந்த தடையும் விதிக்கப்படவில்லை” என்றார்.