இந்திய விமானப்படையில் சேரும் கனவு பல இளைஞர்களுக்கும் இருக்கிறது. அந்தக் கனவை நிஜமாக்க ஒரு அரிய வாய்ப்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இப்போது வந்திருக்கிறது.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் அக்னிபாத் திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு எனப்படும் பதவிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.
இதற்கான,வயது 17 ஆண்டுகள் 6 மாதங்கள் இருக்க வேண்டும்; அதிகபட்சம் 21 ஆண்டுகளை கடந்திருக்கக்கூடாது. இந்த வயது வரம்பு 01-01-2026 தேதியை அடிப்படையாக கொண்டு கணிக்கப்பட்டிருக்கிறது.
12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த நிலைக்கு விண்ணப்பிக்கலாம். அதிலும் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
இந்த ஆட்சேர்ப்பு திறந்தவெளி தேர்வு முறை மூலம் நடைபெறுகிறது. அதுவும் நம் சென்னை தாம்பரம் விமானப்படை தேர்வு மையத்தில் நேரடியாக நடக்க இருக்கிறது.
இதில்,ஆண்களுக்கான தேர்வு தேதி – செப்டம்பர் 2, 2025.
பெண்களுக்கான தேர்வு தேதி – செப்டம்பர் 5, 2025.
இது போன்ற வாய்ப்பு எப்போதும் வராது. இளம் வயதில் நாட்டுக்கு சேவை செய்யும் வாய்ப்பு… அதுவும் இந்திய விமானப்படையில்!
நீங்களும் உங்கள் நண்பர்களும் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கூடுதலாக தகவல் வேண்டுமென்றால் உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.