கடந்த 2018ம் ஆண்டில் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த அபிராமிக்கு அப்பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றி வந்த சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் அபிராமிக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அபிராமி சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவெடுத்தார்.
இதற்கு தடையாக உள்ள கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய முடிவு செய்தார். கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக விஜய் உயிர் தப்பினார். இருப்பினும் 2 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கள்ளக்காதலன் சுந்தரத்துடன் தப்பி செல்ல முயன்ற அபிராமியை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் அபிராமி, சுந்தரம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.