சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று(ஜூலை 22) ஒரே நாளில் ரூ. 10 உயர்ந்து, ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாள்களாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததால், அதன் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. கடந்த வாரம் வரை ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தக்காளி விலை மொத்த விற்பனைக் கடைகளில் ரூ.50 வரையிலும் சில்லறை விற்பனைக் கடைகளில் ரூ. 60 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.