Tuesday, July 22, 2025

இந்தியாவில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலம் இதுதான்

பாராளுமன்ற மக்களவையில் பீகார் எம்.பி.க்கள் 2 பேர் நாட்டின் தனிநபர் வருமான விவரங்களை கேள்விகளாக கேட்டு இருந்தனர். இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி பதில் அளித்தார். இதில் மாநிலங்கள் வாரியான தனிநபர் வருமான விவரங்கள் கொடுக்கப்பட்டன.

இதன்படி நாட்டில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது. அங்கு 2024-2025-ம் ஆண்டு தனிநபர் வருமானம் ரூ.2,04,605 ஆக உள்ளது.

2-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.1,96,309 ஆக உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் அரியானா (ரூ.1,94,285), தெலுங்கானா (ரூ.1,87,912), மகாராஷ்டிரா (ரூ.1,76,678), இமாச்சல பிரதேசம் (ரூ.1,63,465) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news