அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் கையில் விலங்கிட்டு, சிறையில் அடைக்கப்படுவது போன்ற வீடியோ ஒன்று பரவி வருகிறது. செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) உருவாக்கப்பட்ட விடியோவை அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய விடியோ ஒன்றில், அமெரிக்க அதிபர் மாளிகையான ஓவல் அலுவலகத்தில், ஒபாமாவை தரையில் அமர்த்தி கைது செய்கிறார்கள். இதனை அதிபர் டொனால்ட் டிரம்ப் சோஃபாவில் அமர்ந்து புன்னகைத்தவாறு பார்த்துக் கொண்டிருப்பதாக அந்த வீடியோவில் அமைந்துள்ளது.
இந்த விடியோ போலியானது என்றோ, சித்தரிக்கப்பட்டது என்றோ டிரம்ப் குறிப்பிடவில்லை. இதற்கு பல தரப்பினரும் கடும் கண்டனங்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.