தற்போதைய கால கட்டத்தில் வங்கிகளில் கடன் வாங்குவது பலருக்கும் அவசியமான ஒன்றாகிவிட்டது. இருந்தாலும், தவிர்க்க முடியாத காரணங்களால் சில நேரங்களில் EMI தொகையை கட்ட முடியாத சிக்கல் உருவாவதுண்டு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கடன் பெற்றவர் சிறை தண்டனைக்கு ஆளாகக்கூடும் என்ற பயம் பலரிடமும் இருக்கிறது.
ஒருவேளை கடன் தொகையயை செலுத்த முடியாவிட்டால் என்ன நடக்கலாம்? எப்படிப்பட்ட சட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை இப்போது பார்க்கலாம். வங்கி அல்லது பிற நிதி நிறுவனங்களில் ஒருவர் கடன் பெறும்போது அந்தத் தொகையை மாதத் தவணை முறையில் செலுத்தும் வழிமுறை உள்ளது. இந்த வசதியை பயன்படப்பிக்குத்தி முழு கடனையும் கட்டி தீர்க்க முடியும். அதனால் CIBIL கிரெடிட் ஸ்கோரும் அதிகரிக்கும். ஆனால் நீங்கள் EMI செலுத்த தவறும்போது, சட்ட ரீதியான பல சிக்கல்கள் ஆரம்பமாகும். அதற்காக கடன் பெற்றவர் பீதியடையத் தேவையில்லை.
ஏனெனில் EMI கட்டத் தவறுவது, சிறையில் அடைக்கப்படும் அளவுக்கு குற்றமில்லை. ஆனால் காசோலை பவுன்ஸ் ஆனால் அதை கொடுத்தவர் சிறைக்கு செல்ல நேரிடும். ஆனால், வங்கிக் கடனில் அப்படிப்பட்ட பிரச்சனைகள் இல்லை. ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி EMI செலுத்தாதவர்களை அழைத்து யாரும் மிரட்டக் கூடாது என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று தவணைகளை கட்டவில்லை என்றால் கடன் கொடுத்த வங்கி கடன் பெற்றவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
மட்டுமல்லாமல் கடன் வசூலிப்பவர்கள் வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது. அவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். பணம் செலுத்தப்படாத பட்சத்தில் அவர்கள் அடகு வைத்த சொத்தை ஏலம் விடுவதற்கு முன்பு கடன் பெற்றவரை தொடர்பு கொள்ள வேண்டும்.
மேலும் அந்த சொத்து அவர்களின் ஒப்புதலுடன் மட்டுமே ஏலம்விடப்பட வேண்டும். எந்த காரணத்தினாலாவது EMI செலுத்த முடியாமல் போனால் அதைக் குறித்து வங்கி மேலாளரிடம் ஆலோசித்து கடன் காலத்தை நீட்டிக்கவோ அல்லது வேறு ஏதேனும் வழிமுறைகளோ இருந்தால் அவற்றை பின்பற்றலாம். வங்கிகளும் இதை பரிசீலிக்க அதிக வாய்ப்புள்ளது.