உங்களிடம் ஒரு ஆண்ட்ராய்டு போன் இருந்தால் நீங்கள் பூகம்பத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதியில் இருந்து உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம். ஆண்ட்ராய்டு பூகம்ப எச்சரிக்கை (AEA) அமைப்பு 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கி, பின்னர் உலகளவில் விரிவடைந்துள்ளது.
நிலம் நடுங்கத் தொடங்குவதற்கு சுமார் ஒரு நிமிடத்திற்கு முன்பு தானியங்கி எச்சரிக்கையை அனுப்புகிறது. 2021 மற்றும் 2024 க்கு இடையில், AEA அமைப்பு 98 நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு எச்சரிக்கைகளை அனுப்பியது. ஒட்டுமொத்தமாக, 1,279 நிகழ்வுகளுக்கு எச்சரிக்கைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது எப்படி செயல்படுகிறது?
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் உள்ள accelerometer சென்சார்கள் மூலம் நில அதிர்வுகளை உணர்கிறது. ஒவ்வொரு போனும் அதன் தரவு Google செர்வருக்கு அனுப்புகிறது. பல பயனர்களிடமிருந்து பெறப்படும் தரவு இணைக்கப்பட்டு, தலைமை செர்வரில் நிலநடுக்கம் உண்மையானதா என உறுதி செய்யப்படுகிறது.
இந்தியா உள்ளிட்ட பல முக்கிய நாடுகளில் இந்த அமைப்பு செயல்படத் தொடங்கியுள்ளது; பயனர்கள் இணையத்தை (WiFi/மொபைல் டேட்டா) செயல்படுத்தியிருக்க வேண்டும். இதன் மூலம், உங்கள் பாதுகாப்பு அதிகரிக்கும் என்பது ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பாகும்.