Thursday, February 5, 2026

ஏழைகள் குறித்து சர்ச்சை பேச்சு : கியூபாவில் தொழிலாளர் துறை அமைச்சர் ராஜினாமா

கியூபாவில் பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு துறை மந்திரி மார்த்தா எலினா பீடோ கப்ரேரா ஏழைகள் குறித்து அவதூறான கருத்துகளைக் கூறினார்.

அதாவது, பிச்சையெடுப்பவர்கள் ஏழைகள் அல்ல. அவர்கள் ஏழைகள் போல நடிக்கிறார்கள் என விமர்சித்தார்.அவரது கருத்து சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவரை பதவி விலகக்கோரி நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து மார்த்தா எலினா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Related News

Latest News