அமெரிக்காவை உலுக்கிய பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனின் சீல் வைக்கப்பட்ட ஆவணங்களில் அதிபர் டிரம்பின் பெயர் இருப்பதாக அண்மையில் எலான் மஸ்க் புயலை கிளப்பியிருந்தார்.
இந்நிலையில் எப்ஸ்டீனுக்கு டிரம்ப் பிறந்த நாள் வாழ்த்து கூறியதாக, கடிதம் ஒன்றை முன்னணி அமெரிக்க நாளிதழான ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
டிரம்ப் இதை மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் எப்ஸ்டீனுக்கு நான் எழுதியது போல, போலி கடிதத்தை அச்சிட்டுள்ளது என கூறியிருந்தார்.
இந்நிலையில் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ மீது 10 பில்லியன் மானநஷ்டஈடு கேட்டு டொனால்டு டிரம்ப் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.