மதுரையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பை முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து திமுக நிர்வாகிகள், வீடு வீடாகச் சென்று, மக்களைச் சந்தித்து கட்சியில் உறுப்பினர்களாகச் சேர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்களிடம் பல்வேறு ஆவணங்களை கேட்டு தொல்லை செய்வதாகவும் அனுமதி இல்லாமல் முதலமைச்சர் படத்துடன் கூடிய ‘ஓரணியில் தமிழ்நாடு’ என அச்சிடப்பட்ட சுவரொட்டியை வீட்டில் ஒட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
பொதுமக்களிடம் தி.மு.க.வினர் சட்டவிரோதமாக ஆதார் விவரங்களை சேகரித்தது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆதார் தலைமை செயல் அதிகாரி விசாரணை நடத்தி, தி.மு.க. பொதுச்செயலாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராஜ்குமார் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.