ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து 3வது நாளாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து, 9 ஆயிரத்து 170 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து, 73 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து, 126 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.