மாரத்தான் ஓட்டப்பந்தயத்தால் மெரினா முதல் பெசன்ட் நகர் வரை நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
சென்னையில் நாளை மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது. காமராஜர் சாலை நேப்பியர் பாலத்தில் ஆரம்பிக்கும் ஓட்டப்பந்தயம், மெரினா கலங்கரை விளக்கம், மெரினா லூப் சாலை வழியாக பெசன்ட் நகர் வரை நடக்கிறது.
இதனையொட்டி நாளை அதிகாலை 3 மணி முதல் ஓட்டப்பந்தயம் நடக்கும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுகொண்டுள்ளனர்.